39வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அதிமுக: ஜெயலலிதா எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
சென்னை: தமிழ் நாட்டின் முக்கிய எதிர் கட்சியான அதிமுகவை அமரர் எம்ஜிஆர் தொடங்கி இன்றோடு 38 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை கட்சியினர் மாநிலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து கோலாகலமாகக் கொண்டாடினர்.
கட்சித் தலைமையகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் கட்சியின் நினைவு மலரை ஜெயலலிதா வெளியிட எம்.ஜி.ஆர். பேரவையின் தலைவர் பி.ஹெச். பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
அதிமுகவில் இருந்து ஏராளமானோர் விலகி மற்ற கட்சிகளில் இணைந்தது பற்றி அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர். ஆனால், தற்போது ஜெயலலிதா நடத்தி வரும் கண்டனக் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில் நாளை மதுரையில் தமிழக அரசை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மதுரை கூட்டம் குறித்து ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications