புலிகள் பக்க நியாயங்களையும் கேளுங்கள்! - இந்தியாவுக்கு பிரதமர் ருத்ரகுமாரன் வேண்டுகோள்

மேலும் அவர் கூறுகையில், "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமது வாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டுமென இந்திய அரசாங்கத்திடம் மரியாதையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினைப் புதுப்பிப்பது தொடர்பாக தற்போது நடைபெற்றுவரும் விசாரணை அமர்வானது தவறுகள் கொண்டதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு நீதிசார் நடைமுறையிலும் இருதரப்பினரையும் கேட்கும் வாய்ப்பு என்பது இயல்பான நீதியோடும், நியாயத் தன்மையோடும் இணைந்த அம்சமாகும்.
எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் தமது வாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டுமென இந்திய அரசாங்கத்திடம் மரியாதையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
அத்தோடு எந்தத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரும் தமது வாதத்தை முன் வைக்க வரும் பட்சத்தில் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் அல்லது சட்டத்துக்குப் புறம்பான தண்டனையை அனுபவிக்கலாம் என்பது பற்றிய அச்சம் முற்றாகத் தவிர்க்கப்படும் வகையில் இந்திய அரசாங்கம் தம்மால் இயன்ற அத்தனையையும் செய்ய வேண்டுமெனவும் உரத்துக் கூற விரும்புகின்றோம்
தேசங்களின் எல்லைகளைக் கடந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் ஈழத் தமிழ்ச் சமூகத்தினராகிய நாம் எமது சொந்த மண்ணில் நீதியோடிணைந்த விடுதலைக்காக மேற்கொண்டு வரும் போராட்டத்தின் இன்றைய முக்கியமான கட்டத்தில் இந்திய தேசத்திடமிருந்து நீதியையும் நேர்மையினையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்", என்றார் ருத்திரகுமாரன்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications