லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை கிடையாது-சுப்ரீம் கோர்ட்

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி நடராஜ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், புதிய டிஜிபியை தேர்வு செய்யுமாறும் அது உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று நீதிபதிகள் ஜெயின், கபூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜராகிய வக்கீல் பி.எஸ்.ராமன், விதிமுறைகளுக்கு உட்பட்டே லத்திகா சரண் நியமனம் நடந்துள்ளது. எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், டிஜிபிக்கள் நியமனம் தொடர்பாக சில விதிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. அது கடைப்பிடிக்கப்படவில்லை என்று காரணத்தால்தான் லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின்உத்தரவுக்கு தடை விதிக்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறினர். பின்னர் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications