அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை ஜனவரியில் திறக்கிறார் பிரதமர்-ஸ்டாலின்
டெல்லி: சென்னை அடையாறில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்காவை வருகிற ஜனவரி மாதம் திறந்து வைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அவருடன் மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அப்போது, அடையாறில் 358 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைக்க வர வேண்டும் என்று பிரதமருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் தனது மகன் துரை தயாநிதியின் திருமண அழைப்பிதழை மு.க.அழகிரி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,
சென்னை அடையாறில் 358 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் பூங்காவை தமிழக அரசு அமைத்து வருகிறது. ஜனவரி மாதம் நடைபெறும் இதன் திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் சார்பில் பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜனவரி மாதம் சென்னை வருவதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்றார் ஸ்டாலின்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications