இலங்கையின் போர்குற்றத்துக்கு நீங்களும் ஆதாரம் தரலாம்-ஐநாவின் புதிய ஏற்பாடு
நியூயார்க்: இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச போர் விதிகள் மீறல் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை முறையீடுகளாக ஈமெயில் வழியாகவும் அனுப்பலாம் என ஐ.நா. நிபுணர் குழு அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான விஷயங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென்றே ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன், மூன்று நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.
இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான முறையீடுகளை வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என இந்தக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்களை வைத்திருக்கும் எந்தவொரு நபரும் தமக்குத் தெரிந்த உண்மைகளை முறையீடுகளாக இந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். மின்னஞ்சல் முகவரி ([email protected]).
மின்னஞ்சலில் தகவல்களைத் தெரிவிக்கும் நபர்கள் தங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் தொடர்பு எண்ணையும் அதில் குறிப்பிட்டு நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
இந்த நிபுணர் குழுவுக்கு இந்தோனேசியாவின் மர்சூக் தருஸ்மான் தலைமைப் பொறுப்பு வகிக்கிறார். அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்னர், தென்னாபிரிக்காவின் முன்னாள் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர் யஸ்மின் கூகா ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications