2 பெண்களை கற்பழித்து கொடூரமாக கொன்று வீடியோ எடுத்த கனடா விமானப்படை தளபதி

அவரது பெயர் ருஸ்ஸல் வில்லியம்ஸ். இவரை அபாயகரமான நபர் என்று தண்டனை விதித்த கோர்ட்டின் நீதிபதி அறிவித்துள்ளார். ஒன்டாரியோவில் நடந்த விசாரணையின்போது ஜெஸ்ஸிகா லாயிட், மேரி பிரான்ஸ் கோமியு ஆகிய இரு பெண்களைக் கற்பழித்ததோடு, அவர்களைக் கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக ருஸ்ஸலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
ஜெஸ்ஸிகாவும், மேரியும் விமானப்படையில் விமானப் பணிப்பெண்களாகப் பணியாற்றியவர்கள் ஆவர்.
கற்பழிப்பு, கொலை மட்டுமல்லாமல் கொள்ளைச் சம்பவங்களிலும் ருஸ்ஸல் ஈடுபட்டுள்ளார். கிட்டத்தட்ட 80 குற்றங்களில் இவருக்குத் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இவற்றை ருஸ்ஸலும் ஒத்துக் கொண்டார்.
இரு பெண்களையும் கற்பழித்தபோது அதை வீடியோவில் படமாக்கி வைத்திருந்தார் ருஸ்ஸல். அதுவே அவருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக அமைந்தது. மேலும் பல்வேறு வீடுகளை உடைத்து உள்ளே புகுந்து திருடியதையும் கூட இந்த ருஸ்ஸல், வீடியோவில் படமாக்கி வைத்திருந்தார். அவையும் கூட ருஸ்ஸலுக்கு எதிரான ஆதாரமாக அமைந்து விட்டது.
இப்படி தான் செய்த குற்றங்களுக்கான ஆதாரத்தை தானே திரட்டி வைத்திருந்த இந்த நபர் கனடாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான குற்றவாளி என்று அரசுத் தரப்பு வக்கீல் லீ பர்கஸ் கோர்ட்டில் தெரிவித்தார்.
ஆயுள் தண்டனை தீர்ப்பைக் கேட்டதும் ருஸ்ஸல் அழுதார். ருஸ்ஸல் குறைந்தது 25 ஆண்டுகள் சிறையில் கழித்தாக வேண்டும். இந்த காலகட்டத்தில் அவருக்கு ஜாமீனும், பரோலும் கிடைக்காது. மேலும் தனிமைச் சிறையிலும் அவர் அடைக்கப்படவுள்ளார்.
ருஸ்ஸல் முன்பு ஒருமுறை இங்கிலாந்து ராணி எலிசபெத் பயணித்த விமானத்தின் விமானியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு பெண்களின் உடைகளை அணிந்து கொள்வதிலும் அலாதி பிரியம் இருந்துள்ளது. கொலை செய்த பெண்களின் உடைகளை அணிந்தவாறு பல படங்களையும் எடுத்து வைத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications