பெரியாறு அணையை இடிக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டது கேரளா-வைகோ
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணையை முற்றிலும் தரைமட்டமாக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டது கேரள அரசு. கேரள அரசு திட்டமிட்டபடி நடந்தால் தென் தமிழகம் பாலைவனமாக மாறி விடும்.
அணையை உடைக்க முயலும் கேரள அரசின் செயல், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாக அமையும்.
தமிழகத்தின் உரிமையைக் கட்டிக் காக்க முதல்வர் கருணாநிதி எந்த முயற்சியையும் எடுக்காமல் அமைதி காக்கிறார். முதலில் உச்சநீதிமன்றம் அமைத்த கமிட்டியில் பங்கேற்க மாட்டோம் என்று கூறிய அவர் பின்னர் பிரதிநிதியை அறிவித்தார்.
அணையை உடைக்க முயலும் கேரள அரசின் முயற்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தி தென் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications