காங். எம்.பி. குறை கூறி பேச்சு-கண்டித்த சபாநாயகர்-நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லையில் நடந்த புதிய போக்குவரத்துக் கோட்ட தொடக்க விழாவின்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் எம்.பி குற்றம் சாட்டினார். அப்படி பேசக் கூடாது என்று கூறி அவரை சபாநாயகர் ஆவுடையப்பன் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று நெல்லையில் புதிய போக்குவரத்துக் கோட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஆவுடையப்பன், போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் மைதீன் கான், கீதா ஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் எம்.பி. ராமசுப்பு பேசுகையில், அரசு பேருந்துகளில் அறிவிக்கடாமல் கட்டணங்கள் உயருகிறது. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பல விதமாக பேருந்துகளை பிரித்துள்ளீர்கள். பேருந்து எங்கே நிற்கின்றது. எந்த பேருந்துக்கு எவ்வளவு கட்டணம் என்பது மக்களுக்கு புரியவில்லை. இந்த குழப்பதை போக்குவரத்துறை அமைச்சர் தவிர்க்க வேண்டும் என்றார்.
பின்னர் பேச வந்த சபாநாயகர் ஆவுடையப்பன், ராமசுப்புவைக் கண்டிப்பது போலப் பேசினார். அவர் பேசுகையில், பொறுமையை சோதிக்கும் அளவுக்கு பேச்சுக்கள் இருக்கக் கூடாது. கோரிக்கை வைக்கும் இடம் இதுவல்ல. கோரிக்கை வைப்பதற்காக அசம்பிளி இருக்கின்றது. அங்கே நீங்கள் கோரிக்கையை எழுப்புங்கள். அமைச்சர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள். எனவே இனி இந்த மேடையில் பேச வரும் நண்பர்கள் வாழ்த்தி பேசுங்கள் என்றார்.
காங்கிரஸ் எம்.பி. குறை கூறி பேசியதும், அதைக் கண்டித்து சபாநாயகர் பேசியதும் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications