கருப்புப் பணத்தை ஒழிக்க வரிவிதிப்பில் மாற்றம் வர வேண்டும்-கி.வீரமணி கோரிக்கை
சென்னை: வெளிநாடுகளில் போய் கருப்புப் பணத்தை குவிக்கும் செயலைத் தடுக்க, நாட்டின் வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.
சென்னையில் வருமான வரி விதிப்பு வரைவு நகல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வீரமணி பேசுகையில்,
சாதாரண ஏழை எளிய மக்களும் வரி விதிப்பு முறையை அறிந்து கொள்ளும் வகையில், வருமான வரி விதிப்பு வரைவு நகலில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்கும் வகையிலும் வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்கும் வகையில் வரி விதிப்பில் மாற்றங்கள் செய்தால், நாட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடையும்.
இந்த கருத்தரங்களில் தெரிவிக்கப்படும் ஆலோசனைகள் மத்திய அரசுக்கு வருமான வரி விதிப்பு வரைவு நகலில் சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.
கருத்தரங்கில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கமும் பேசினார். அவர் கூறுகையில், நேரடி வரிவிதிப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. புதிய திருத்தங்களுடன் அடுத்த ஆண்டு முதல் வருமான வரி விதிப்பு வரைவு நகலை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications