ட்ரோல் பண்றவர்களுக்கு சிறப்பான பதிலடி கொடுத்த நடிகர் சக்தி.. அஜ்மல் கொடுத்த கமெண்ட்! செம பஞ்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் 'தொட்டால் பூ மலரும்' படத்தின் "அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா..." பாடல் மூலம் இளம் ரசிகைகளின் மனதை கவர்ந்த நடிகர் சக்தி, கடந்த சில ஆண்டுகளாக படங்களில் அதிகம் நடிக்கவில்லை. ஆனாலும் சமீபத்தில், அவரது உடல் எடை அதிகரித்த தோற்றத்தை வைத்து சமூக வலைதளங்களில் பலரும் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர்.

மீம்ஸ்கள், கிண்டல்கள், உடல் எடையை விமர்சிக்கும் பதிவுகள் என தொடர்ந்து வந்தாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது நடிகர் சக்தி வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சக்தி புதிய வீடியோ

ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், "என்னை சீக்கிரம் இப்படித்தான் பார்ப்பீர்கள். நான் வொர்க்அவுட் ஆரம்பித்தால் என்னுடைய வில் பவர் வேற லெவல். என்னை ட்ரிகர் பண்ணுற எல்லாருக்கும் நன்றி. அது என்னை இன்னும் மோட்டிவேட் பண்ணுது. இதெல்லாம் எனக்கு புதுசு இல்லை. ட்ரிகருக்கு ட்ரிகரா இருப்பவன் நான்தான். யாருக்கும் எந்த தீங்கும் இல்லை... சீக்கிரம் சந்திப்போம்" என்று நம்பிக்கையுடன் எழுதியுள்ளார்.

Shakthi Actor Shakthi Ajmal Ameer P Vasu

நடிகர் அஜ்மல் கமெண்ட்

இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலக நண்பர்களும் அவருக்கு உற்சாகம் கொடுக்க ஆரம்பித்தனர். அதில் நடிகர் அஜ்மல் அமீர் போட்ட ஒரு கமெண்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"ஒரு படம் போதும்... ஒரு தலைமுறை உன்னை மறக்காமல் இருக்க. அதுதான் உண்மையான Aura" என்று அஜ்மல் எழுதியிருக்கிறார். இந்த ஒரு வரி கமெண்ட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகிறது.

நட்பின் பெருமை

அஜ்மலின் இந்த வார்த்தையை பார்த்த ரசிகர்கள், "உண்மையிலேயே நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்", "சக்திக்கு இந்த மாதிரி மோட்டிவேஷன் இப்போ ரொம்ப தேவை", "ட்ரோல் பண்ணுறவங்களை விட இப்படிச் சப்போர்ட் பண்றவங்க தான் அதிகம் இருக்காங்க" என்று பாராட்டி வருகின்றனர்.

இயக்குநர் பி. வாசுவின் மகனான சக்தி, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 'நடிகன்', 'சின்ன தம்பி', 'ரிக்ஷா மாமா' போன்ற படங்களில் குழந்தை வேடங்களில் நடித்த அவர், ஹீரோவாக 'தொட்டால் பூ மலரும்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆட்ட நாயகன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

சக்தி கம்பேக்

அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை அதிகரித்தது குறித்து வந்த ட்ரோல்கள் அவரை அதிகமாக பாதித்ததாக கூறப்பட்டது.

இப்போது அந்த விமர்சனங்களையே பலமாக மாற்றிக் கொண்டு, மீண்டும் பழைய உடல் கட்டுக்குத் திரும்ப தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் வெளியிட்ட ஜிம் வீடியோவை பார்த்த ரசிகர்கள், "மீண்டும் பழைய சக்தியை பார்க்கணும்", "இந்த கம்பேக் வெற்றியாகட்டும்", "ட்ரோல்களுக்கு பதில் பேசாமல், உடம்பை மாற்றிக் காட்டுறது தான் சரியான பதில்" என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் பல நடிகர்கள் உடல் எடையை குறைத்து மிரட்டலான கம்பேக் கொடுத்திருக்கும் நிலையில், அந்த பட்டியலில் நடிகர் சக்தியும் இணையப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+