இலங்கையைக் காக்க இந்திய ஒருமைப்பாட்டை காவு கொடுத்த காங். அரசு-வைகோ
சென்னை: இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறோம் என்று கூறி இந்தியாவின் ஒருமைப்பாட்டை காவு கொடுத்து விட்டது இந்திய அரசு என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில், கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும் என்ற பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,
இந்திராகாந்தி இருக்கும் வரை ஈழத் தமிழர்களுக்கு உதவினார். ஈழ யுத்தத்திற்கு களம் அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். ஆவார். தேவையான பண உதவிகளை செய்தார். ஆனால், இப்போதைய அரசு செய்த துரோகத்திற்கு எல்லாம் பெரும் துரோகமாக, காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்து வந்தனர்.
இலங்கை ஒருமைப்பாட்டை காப்பதற்காக இந்திய ஒருமைப்பாட்டை காவு கொடுத்திருக்கிறார்கள். இந்த பூமிப் பந்தில் எங்கோ ஓர் இடத்தில் பிரபாகரன் இருக்கிறார். நாம் வாழும் காலத்திலேயே தமிழ் ஈழத்தை அவர் படைப்பார்.
உலகில் 50 புதிய நாடுகள் உருவாகியுள்ளன. அப்படி இருக்கும்போது, ஏன் தமிழ் ஈழம் உருவாக கூடாதா?. தமிழ் ஈழம் மலர்வது உறுதி. தமிழ் ஈழ விடுதலை போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும் என்றார் வைகோ.
நெடுமாறன் பேசுகையில்,
இந்த பாடல்கள் ஈழத்தில் களத்தில் நிற்கும் போராளிக்கும், ஈழ மக்களுக்கும் எழுச்சி ஊட்டும். கவிஞர் காசி ஆனந்தனின் குடும்பம் ஈழத் தமிழர்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம். இந்த சி.டி. ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று கூறினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications