தமிழக கடலோரப் பகுதிகளில் மழை-வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்
சென்னை: வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளன. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிளில் நேற்று மழை பெய்தது.
அக்டோபர் மத்தியில், வட கிழக்குப் பருவ மழை தொடங்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அது சற்று தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் விரைவில் பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அது உண்மைதானோ என்று நினைக்கும் வகையில் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்,
தமிழ் நாட்டுக்கு பெய்யக்கூடிய மழை அளவில் பெரும்பான்மையான மழையை கொடுப்பது வடகிழக்கு பருவமழை. இது அக்டோபர் 20 அல்லது அதற்கு ஒரு வாரத்திற்கு முன்போ ஒருவாரத்திற்கு பிந்தியோ தொடங்குவது வழக்கம். எப்போதாவதுதான் நவம்பர் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இன்னும் தென்மேற்கு பருவமழை முடியவில்லை. தென்மேற்கு பருவமழை முடிந்ததும்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக தற்போது வீசக்கூடிய நிலக்காற்று மாறி கடல் காற்று நிலத்திற்குள் வீசும். இது கீழைக்காற்று என்று அழைக்கப்படும்.
இந்த கீழைக்காற்று வீசத்தொடங்கினால்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அர்த்தம். அந்த கீழைக்காற்று இன்னும் 48 மணி நேரத்திற்குள் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யவேண்டும். அப்போதுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக முறைப்படி அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந் தேதிதான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி மகாபலிபுரம், புதுச்சேரி விமான நிலையத்திலும் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையிலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
பின்னர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வங்கக் கடலின் மத்திய மேற்கு பகுதியிலும் அதை சுற்றி சுமார் 2 கி.மீட்டர் தூரத்திலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையைப் பொறுத்தவரை நகர்ப் பகுதிகளில் பல இடங்களில் நல்ல மழையும், மற்ற இடங்களில் பரவலான மழையும் காணப்பட்டது. புறநகர்ப் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது.
இன்றும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இன்றும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications