நாங்கள் ராஜீவ் சிலையை அவமதிக்கவில்லை-சோனியாவுக்கு திருமா. கடிதம்
சென்னை: சென்னையில் ராஜீவ் காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடிதம் மூலம் விளக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் கட்சி ஆகும். நாங்கள் மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம். அதன் அடிப்படையில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்.
2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாங்களும் ஒரு உறுப்பினர்.
இந்த சமயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு எங்கள் கட்சிக்கும் அழைப்பு விடுத்ததற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். காஷ்மீருக்கு சென்ற அனைத்து கட்சிகள் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமனம் செய்ததற்கும், சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் விரும்பத்தகாத சம்பவம் பற்றி உங்களுக்கு சில விளக்கங்கள் அளித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
சென்னை அசோக்நகரில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலையை அவமானம் செய்த சம்பவத்தை கண்டித்து, அந்த மனித தன்மையற்ற நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று எங்கள் சார்பில் கேட்டிருக்கிறோம். ஆனால், சில காங்கிரசார் அங்கு கூடிநின்று நடத்திய போராட்டத்தில் எங்கள் கட்சியினரையும் உள்நோக்கத்தோடு அதில் சம்பந்தப்படுத்தி பேசியதோடு என்னை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த சம்பவத்தில் எங்களுக்கு துளியளவும் தொடர்பு இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி செல்வதில் மட்டுமல்ல இந்த முழு இந்தியாவையும் வழிநடத்தி செல்லும் உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு எப்போதும் உண்டு.
தேசத்தின் நலனுக்காக உங்களது குடும்பம் அளித்துள்ள பங்களிப்பை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். தமிழகத்தில் தலித் மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்லுறவு நீண்டகாலமாக இருந்து வருகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் தலித் மக்களின் நிலை பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் எல்.இளையபெருமாள் மற்றும் தமிழகத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் ஆகியோரை பெருமையுடனும், அன்புடனும் நினைவுகூறுகிறோம்.
மீண்டும் ஒருமுறை உங்கள் குடும்பத்திற்கு, குறிப்பாக ராஜீவ்காந்திக்கு எனது மரியாதையையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தம் உண்டு என்று கூறப்படுவதை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications