தபால் நிலையங்களில் 20 கிராம் தங்க நாணயம் அறிமுகம்: அலைமோதும் மக்கள் கூட்டம்
நெல்லை: தபால் துறை சின்னம் பொறிக்கப்பட்ட 20 கிராம் தங்க நாணய விற்பனை அனைத்து தபால் நிலையங்களிலும் தூவங்கியது.
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தபால் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தங்க நாணய விற்பனை அனைத்து தபால் நிலையங்களிலும் துவங்கப்பட்டது. வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தங்க நாணய விற்பனையை ஊக்கப்படுத்த தபால் நிலையங்களுக்கிடையே போட்டி நடத்தப்பட்டது. இதில் நெல்லை தலைமை தபால் நிலையம் முதலிடத்தை பிடித்தது.
தபால் நிலையங்களில் 0.5 கிராம், ஒரு கிராம், 5 கிராம், 8 கிராம் ஆகிய எடைகளில் தங்க நாணயம் விற்கப்படுகிறது. இதில் தனியார் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் தபால் நிலையங்களில் தங்க நாணயங்களை வாங்க சிலர் தயக்கம் காட்டினர். இதையடுத்து மக்களின் நம்பிக்கையை பெறத் தபால் துறை சின்னம் தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அதோடு வாடிக்கையாளர்களுக்காக 20 கிராம் எடையுள்ள தங்க நாணயமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை வாங்க மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி தங்க நாணய விற்பனையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 10 கிராம் தங்க நாணயம் வாங்கினால் அரை கிராம் தங்க நாணயம் அல்லது 6 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க நாணயம் வாங்க நெல்லை தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications