தேவர் குருபூஜைக்கு வரும் ஜெயலலிதாவுக்கு பலத்த பாதுகாப்பு
சென்னை: இன்று பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்துகிறார். இதற்காக அவர் செல்லும் வழி முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பசும்பொன்னில் நடக்கும் தேவர் குரு பூஜைக்கு ஏராளமான அரசியல் பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளர். இதில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து காரில் பசும்பொன் செல்கிறார்.
அவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதையடுத்து, அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்குமாறு அதிமுகவினர் காவல்துறையைக் கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவர் வரும் வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் காரில் 2 மணி நேரம் பயணம் செய்கிறார். வழியில் அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர்.
ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தேவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications