அமெரிக்கா தகவல் தந்தது, ஆனால் ஹெட்லி பெயர் இல்லை-ப.சிதம்பரம்

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.பிள்ளை, ஹெட்லி குறித்த தகவல்களை முன்கூட்டியே அமெரிக்கா தரவில்லை. தந்திருந்தால் அவன் இந்தியா வந்திருந்தபோதே மடக்கிப் பிடித்திருக்கலாம், மும்பை தாக்குதல் சம்பவத்தையும் தவிர்த்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், மும்பைத் தாக்குதல் தொடர்பான தகவல்களை அமெரிக்கா கொடுத்திருந்தாலும், அதில் ஹெட்லியின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.கே.பிள்ளை கூறிய தகவல்களை மீடியாக்கள் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கியுள்ளன. இது தேவையற்றது.
அமெரிக்கா அனைத்துத் தகவல்களையும் இந்தியாவிடம் தெரிவித்திருந்தது. மும்பைத் தாக்குதலுக்கு முன்பாகவே அனைத்துத் தகவல்களையும் நமக்கு அவர்கள் தெரிவித்திருந்தனர். மும்பைத் தாக்குதலுக்கு முன்பாகவே உளவுத் தகவல்கள் தரப்பட்டிருந்தன.
தற்போது ஹெட்லி குறித்த பல விவரங்களை அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. அவை முடிந்தவுடன் அவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
ஹெட்லி விவகாரத்தைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்பது எனது கருத்து. ஹெட்லியின் பெயரை அமெரிக்கா குறிப்பிட்டிருக்காவிட்டாலும் கூட மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர்கள் கொடுத்த பல தகவல்கள் நமக்கு உதவிகரமாகவே இருந்தது.
ஹெட்லியின் பெயரை 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் அமெரிக்கா நம்மிடம் தெரிவித்தது.
ஹெட்லியை நாடு கடத்துவது என்பது ஒரு சாத்தியக் கூறாகவே உள்ளது. ஹெட்லி மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வது என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் முடிவெடுக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications