பருவ மழை எதிரொலி-தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி முடக்கம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைப்பாறு, தூத்துக்குடி, கயத்தாறு பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது.
நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் சராசரியாக 26.47 மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்திலேயே மிக அதிகபட்சமாக காடல்குடியில் 71மிமீ, திருச்செந்தூரில் 1 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற இடங்களில் மழை பெய்த அளவு வருமாறு,
திருச்செந்தூர் 1மிமீ, குலசேகரபட்டிணம் 8மிமீ, விளாத்திகுளம் 35மிமீ, வைப்பாறு 26, கயத்தாறு 50, கோவில்பட்டி 32, ஓட்டபிடாரம் 52.3, கடம்பூர் 12, மணியாச்சி 12, எட்டயபுரம் 58, தூத்துக்குடி 68.7 மழை பதிவாகியுள்ளது.
பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரத்திற்கும் அதிமாக பரப்பளவுள்ள உப்பளங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி அடியோடு முடங்கியுள்ளது. தீபாவளி விற்பனையும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications