திருப்பூர் அருகே பொதுப்பாதையை தடுத்து கட்டப்பட்ட தீண்டாமை சுவர் அகற்றம்
திருப்பூர்: திருப்பூர் அருகே பொதுப்பாதையைத் தடுத்துக் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரை காவல் துறை பாதுகாப்போடு வருவாய்த் துறையினர் அகற்றினர்.
சுல்தான்பேட்டை ஆதிதிராவிடர் காலனியில் 300 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த காலனியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா நகருக்குச் செல்லும் பாதையை மறைத்து தனியார் ஒருவர் தடுப்புச் சுவர் கட்டியிருக்கிறார். மேலும் இந்த பாதையையும் ஆக்கிரமித்து மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. இதற்கு தலித் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த சிலர், மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி மனுக் கொடுத்தனர்.
இதனையடுத்து, திருப்பூர் கோட்டாட்சியர் சொக்கன், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகிய வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியில், பொதுப்பாதையை மறைத்து தீண்டாமை சுவர் கட்டப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த சுவரை போலீசார் பாதுகாப்போடு வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications