கர்நாடகம்: பதவி கேட்டு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி- அமைச்சரவை விரிவாக்கம் ஒத்தி வைப்பு
பெங்களூர்: அமைச்சர் பதவி கேட்டு ஏராளமான பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதையடுத்து, இன்று நடைபெற இருந்த அமைச்சரவை விரிவாக்கத்தை முதல்வர் எதியூரப்பா திடீரென கைவிட்டுவிட்டார்.
எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 11 பாஜக எம்.எல்.ஏ.க்களும், 5 சுயேச்சைகளும் வாபஸ் பெற்றதை தொடர்ந்து தொடர்ந்து இந்த 16 பேரையும் பதவி நீக்கம் செய்து சபாநாயகர் போப்பையா உத்தரவிட்டார்.
இதில் பாலச்சந்திர ஜார்கிஹோளி, ஆனந்த் அஸ்னோடிகர், சுதாகர், நரேந்திரசாமி, வெங்கட ரமணப்பா, நரேந்திரசாமி ஆகிய அமைச்சர்களும் அடங்குவர். இந்த இடங்களை நிரப்ப அமைச்சரவையை விரிவாக்க எதியூரப்பா திட்டமிட்டார்.
முதல் கட்டமாக இன்று 4 அமைச்சர்களை நியமிக்க அவர் திட்டமிட்டிருந்தார்.
சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவளித்த சுயேட்சை எம்.எல்.ஏ. வர்த்தூர் பிரகாஷ் மற்றும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட பாஜக எம்எல்ஏவான சி.டி.ரவிஸ மற்றும் சிவண்ணா, ராஜு கெளடா ஆகியோர் அமைச்சர்களாக நியமி்க்கப்படுவர் என்று தகவல் வெளியானது.
அமைச்சரவை விரிவாக்கம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் தகவல் துறை நேற்று மாலை வெளியிட்டது. அதில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தகவல் துறை இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது.
அமைச்சர் பதவி கேட்டு பல எம்எல்ஏக்களும் போர்க்கொடி உயர்த்தியதால் பாஜக தலைமை இந்த முடிவை எடு்த்துள்ளது.
அமைச்சர் பதவி கிடைக்காது என்பதால் அரசின் தலைமை கொறடா ஜீவராஜ் மற்றும் மாநில எல்லைப்பகுதி வளர்ச்சி ஆணையத் தலைவராக உள்ள சந்திரகாந்த் பெல்லத் ஆகிய இரு எம்எல்ஏக்களும் தாங்கள் வகித்து வந்த அந்தப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போல நாராயணசாமி, அப்பச்சு ரஞ்சன், கிருஷ்ணய்ய ஷெட்டி உள்ளிட்டோர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் தங்களது எம்.எல்.ஏ. பதவியையே ராஜினாமா செய்யப் போவதாகவும் பாஜக தலைமையை மிரட்டி வருகின்றனர்.
இதற்கிடையே அமைச்சர் பதவி ஏற்க தயாராக இருந்த சி.டி.ரவிக்கும், அமைச்சர் பதவி கிடைக்காத தலைமை கொறடாவுக்கும் நேற்று திடீரென வாக்குவாதமும் மோதலும் நடந்தது.
இந்த சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த எதியூரப்பாவும் பாஜக தலைமையும் அமைச்சரவை விரிவாக்கத்தை கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டனர்.
விரைவில் அமைச்சரவை மாற்றம்-எதியூரப்பா:
இந் நிலையில் விரைவில் கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை. திட்டமிட்டபடி அமைச்சரவை மாற்றம் நடைபெறும். பெயர்களை இறுதி செய்வதில் மட்டுமே தாமதம் நிலவுகிறது. விரைவில் அமைச்சரவை மாற்ற தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
கட்சி மேலிடத் தலைவர்களுடன் விரைவில் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கவுள்ளேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications