ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்: கடற்படை விசாரணை அறிக்கை தாக்கல்
டெல்லி: மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில் நடந்துள்ள ஊழல் குறித்த விசாரணை அறிக்கையையும், அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளையும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கடற்படை சமர்பித்துள்ளது.
மும்பை கொலபாவில் கடற்படை அதிகாரத்துக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்புகள் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்டன.
இதை ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் கட்டியது. முதலில் 6 தளங்களைக் கொண்டதாக இந்தக் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் அனைத்து விதிகளையும் மீறி 31 தளங்களைக் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டன.
ஆனால், இதில் வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் பெரும் மோசடி நடந்துள்ளது. இந்தக் குடியிருப்புகளில் 104 வீடுகள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள், அரசு அதிகாரிகள், முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஒதுக்கப்பட்டன.
இதில் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணின் மாமியார், மைத்துனி மற்றும் மைத்துனருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. சவாண் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது தான் 31 மாடிகள் கட்ட விதிகளை மீறி ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ரூ. 70 லட்சம். ஆனால், இவை அடிமாட்டு விலைக்கு அதாவது ரூ. 6.5 லட்சத்துக்கு அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவரங்கள் வெளியே வந்ததையடுத்து இது குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் பாதுகாப்பு அமைச்சகமும் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உயர்நிலை தலைவர்கள் கொண்ட குழுவும் விசாரித்து வருகிறது.
இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு அசோக் சவாணுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். இதையடுத்து அவரிடம் தனது ராஜிநாமா கடிதத்தை சவாண் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்த இரு நாட்கள் மும்பையில் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதால், இதன் பிறகு சவாண் பதவி நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
மேலும் இது குறித்து விசாரிக்குமாறு கடற்படைக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந் நிலையில் வீடுகள் யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை ஒப்படைக்குமாறு ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி கடற்கரை பகுதியில் இந்தக் குடியிருப்புகள் கட்டுப்பட்டுள்ளதால், இந்தக் கட்டிடத்தில் யாரும் குடியேற முடியாத வகையில் உத்தரவைப் பிறப்பிக்கப் போவதாகவும் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். தேவைப்பட்டால் இந்தக் 31 மாடிக் கட்டதத்தை இடிக்கவும் உத்தரவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications