வேலூர் சிறையில் நைஜீரிய கைதியிடம் சிக்கிய செல்போன்கள், போதை மாத்திரைகள்
வேலூர்: வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் தடை செய்யபட்ட பொருட்கள் உள்ளனவா என்று சோதனை நடத்தியதில் 3 செல்போன்கள், போதை மாத்திரைகள் ஆகியவற்றை நைஜீரியாவைச் சேர்ந்த கைதி ஒருவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிறை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 1,2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைதிகள் செல்போன்கள், சிம்கார்டுகள், பேட்டரிகள், சார்ஜர்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நேற்று நடந்த சோதனையில் நைஜீரியாவைச் சேர்ந்த கைதி சிட்டோஜி டோபு (கைதி எண்: 4336) என்பவர் தனது உள்ளாடைக்குள் 3 செல்போன்கள், ஒரு சிம் கார்டு, சார்ஜர், 50-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் குறி்த்து பாகாயம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications