கேரள இளைஞர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 2 கர்நாடக வாலிபர்கள் கைது
திருவனந்தபுரம்: பெங்களூருக்கு சுற்றுலா சென்ற கேரள இளைஞர்களை மிரட்டி, பெண்களுடன் நிர்வாணமாக நிற்க வைத்து ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கர்நாடக வாலிபர்களில் 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெங்களூருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு விமான நிலையம் அருகே உள்ள நண்பர் வீட்டில் தங்கினர்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை மிரட்டி சில பெண்களுடன் நிர்வாணமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தது. அதை காட்டி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது. ஊருக்கு சென்று பணம் எடுத்து தருவதாக அவர்களிடம் கூறிவிட்டு 4 பேரும் தப்பி வந்தனர். தொடர்ந்து செல்போனில் அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டி வந்தது.
இது குறித்து 4 பேரும் மலப்புரம் சங்கரன்குளம் போலீசில் புகார் செய்தனர். பணம் தருவதாகக் கூறி போலீசார் அந்த கும்பலை தந்திரமாக கேரளாவுக்கு அழைத்தனர். நேற்று மு்ன்தினம் மலப்புரம் வந்த 2 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மைசூர் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த யூசுப் மற்றும் மதிக்கேரி மாவட்டத்தைச் சேர்ந்த யாக்கூப் என தெரிய வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications