பாகிஸ்தான்: 2 மசூதிகளில் குண்டுவெடிப்பு-72 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்: பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியி்ல் இரு மசூதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் 72 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை வழிபாடு நடந்து கொண்டிருந்த நிலையில் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினான். இதில் 67 பேர் பலியாயினர்.
பெஷாவருக்கு 45 கி.மீ. தூரத்தில் உள்ள அகுர்வால் என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
இதைத் தொடர்ந்து சுலேமான் கேல் என்ற கிராமத்தில் உள்ள மசூதியிலும் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாயினர்.
இந்தத் தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.












Click it and Unblock the Notifications