முக்கியமான முடிவுகளில் காங்கிரஸை திமுக ஆலோசிப்பதில்லை-இளங்கோவன் புகார்

தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
மத்தியில் ஆட்சியில் பங்கேற்றுள்ள காரணத்தால் திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை தருகிறது. பெட்ரோல் விலை உயர்வு போன்ற கொள்கை முடிவுகளில் திமுகவையும் கலந்து பேசித்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவால் பெரும்பான்மை பெறும் நிலை தமிழகத்தில் இருந்தாலும், திமுக அரசு முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது கூட காங்கிரஸ் தலைவர்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை. உதாரணமாக துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுவது பற்றி காங்கிரஸை கலந்து ஆலோசிக்கவில்லை.
மத்தியில் கூட்டணியில் உள்ள ஒரே காரணத்துக்காகத்தான், சில குறிப்பிட்ட புகார்கள் வந்தபோதிலும், நாங்கள் சப்பைக்கட்டு கட்டும் நிலை இருக்கிறது. கூட்டணி தர்மத்தால் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை காங்கிரஸ் தொண்டர்கள் பிரதிபலிக்கும் போது சங்கடங்கள் உருவாகின்றன. இதனால் காங்கிரஸ் கட்சி தனித்துவத்தை இழந்து வருவது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது. அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக நான் குரல் கொடுத்து வருகிறேன்.
தமிழகத்தைப் பொருத்தவரை தனித்து தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். 1967ம் ஆண்டில் திமுக வென்றபோதுகூட, காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் திமுக தலைமையில் கூட்டு சேர்ந்துதான் போட்டியிட்டன.
எனவே ஒருமித்த கருத்து இருப்போர், மக்களுக்கு நம்பிக்கை உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். இதுபற்றி மேலும் விரிவாகக் கூறுவதற்கு இன்னும் காலம் கனியவில்லை. விரைவில் இதுபோன்ற நல்ல சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன்.
விஜய்காந்த் தனது பலத்தை விஜயகாந்த் சிதற விட்டுவிடக் கூடாது. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் அவரது கட்சிக்கு சுமார் 10,000 வாக்குகள் இருப்பது சாதாரண விஷயமல்ல. இதை எப்படி நல்ல முறையில் பயன்படுத்தி கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று விஜயகாந்த் யோசிக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications