பெருமளவில் நீர் திறப்பால் காவிரியில் வெள்ள அபாயம்-கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை
தர்மபுரி: கர்நாடகத்தில் கன மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாலும், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரங்களில் வசிப்போர் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடகத்தின் கிருஷ்ணராசாகர், கபிணி உள்ளிட்ட அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் பெருமளவில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
ஆற்றில் யாரும் மீன்பிடிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஓகனேக்கல், கூத்தப்பாடி, ஒத்தமலை ஆகிய பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேட்டூருக்கு விநாடிக்கு 50,000 கன அடி நீர் வருகை
காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியைத் தாண்டி வரத் தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 84.81 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது.
தற்போது அணைக்கு விநாடிக்கு 50,000 கன அடிகளைத் தாண்டி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications