அணுக் கழிவு ஏற்றிச் சென்ற ரயில் மறிப்பு: போராட்டக்காரர்களுடன் போலீஸார் மோதல்
பெர்லின்: ஜெர்மனியில் அணுக் கழிவுகளை ஏற்றிச் சென்ற ரயிலை அயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மறித்தனர்.
இவர்களை ரயில் பாதையில் இருந்து கலைந்துபோகச் செய்ய வந்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
லா ஹேகில் இருந்து அணுக் கழிவுகளை ஏற்றிக் கொண்ட ரயில் கடந்த வெள்ளிக்கிழமை வேலோக்னஸில் இருந்து புறப்பட்டது. இது கீழ் சாக்ஸனி கோர்லெபெனில் உள்ள அணுக் கழிவுகளை தற்காலிகமாக சேமித்து வைக்கும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
ரயில் டெனன்பர்க் என்னும் இடத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது ரயில் பாதையில் தர்ணாவில் ஈடுபட்டிருந்தவர்களால் நிறுத்தப்பட்டது. இவர்கள் ஒரு நாள் இரவு முழுவதும் தண்டவாலத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தினர்.
11 விசேஷ கன்டெய்னர்களில் தீங்கு விளைவிக்கும் அணுக் கழிவுகள் இருந்தன. அவற்றை கோர்லெபென் செல்லும்முன் டெனன்பெர்கில் வைத்து பெரிய டிரெய்லர் டிரக்குகளுக்கு மாற்றவிருந்தனர். இதைத் தடுத்து நிறுத்தத் தான் போராட்டக்காரர்கள் தண்டவாளத்தை மறித்தனர்.












Click it and Unblock the Notifications