கேரளாவில் எய்ட்சுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள சம்பன்னுர் பகுதியில் போலி டாக்டர் சிகிச்சை அளித்து வருவதாக ஆலுவா கூடுதல் எஸ்.பி. ஜெயநாத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று சம்மனூர் பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் திடீர் சோதனை நடத்தி யாக்கோபு என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் போலி டாக்டர் என்பது தெரிய வந்தது. எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்த அவர் ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அளித்து உள்ளார்.
தாய்லாந்து, பீகார் ஆகிய இடங்களில் எம்.பி.பி.எஸ்., ஆர்.எம்.பி., எச்.எம்.பி.எஸ். ஆகிய படிப்புகளை படித்ததாக போலிச் சான்றிதழ்களும் வைத்து இருந்தார்.
இவர் தலைவலி தொடங்கி ஆண்மைக்குறைவு, எய்ட்ஸ் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரிடம் தினமும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இவரை போலீசார் நேற்று ஆலுவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications