சென்னை - நெல்லை இடையே வாராந்திர ஏசி ரயில்... இன்று முன்பதிவு துவக்கம்!
சென்னை: சென்னை - நெல்லை இடையே முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது.
தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் குளிர்கால சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர், மயிலாடுதுறை வழியாக திருநெல்வேலிக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது.
17-ந்தேதியிலிருந்து டிசம்பர் 15-ந்தேதி வரை வாரத்தில் புதன்கிழமை மட்டும் இந்த சிறப்பு ரயில் (எண்.06013) விடப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.
திருநெல்வேலியில் வரும் 18-ந்தேதியில் இருந்து டிசம்பர் 16-ந்தேதி வரை வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் சிறப்பு ரயில் (எண்.06014) இயங்கும்.
நெல்லையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
இந்த ரயிலில் மொத்தம் 13 பெட்டிகள் உள்ளன. அவை அனைத்தும் 3 -ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளாகும். சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு பயண கட்டணம் ரூ.756. எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரூ.749 கட்டணம்.
இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடு துறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி நிலையங்களில் நின்று செல்லும்.
இதற்கான முன்பதிவு இன்று முதல் செய்யப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications