பாளையங்கோட்டையில் பெண் கற்பழித்துக் கொலை-3 மாதத்திற்கு பிறகு கொலையாளி கைது
நெல்லை: பாளையங்கோட்டையில் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளிகளில் ஒருவரை போலீசார் 3 மாதத்திற்குப் பிறகு கைது செய்தனர்.
பாளை மணக்காவலம்பிள்ளைச் நகரை சேர்ந்தவர் சுந்தரி. இவரது கணவர் இறந்து விட்டதால் ஆறுமுகம் என்பவரை 2-வது திருமணம் செய்தார். ஆறுமுகம் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். சுந்தரி கடந்த ஆகஸ்ட் மாதம் நெல்லையில் நடந்த அரசு பொருட்காட்சி ஸ்டாலில் வேலை செய்து வந்தார்.
சுந்தரி ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர் கிருபா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பர்கிட்மா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பைக்கில் சென்றார். கிருபா நகர் விளக்கு அருகே செல்லும்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் அவர்களை வழிமறித்தனர்.
அவர்கள் சுப்பிரமணியனை தாக்கி விட்டு சுந்தரியை வலுகட்டாயமாக தூக்கிச் சென்று பலாத்காரம் செய்தனர். அப்போது அவர்களுக்குள் நடந்த தகராறில் சுந்தரி கொலை செய்யப்பட்டார். பின்னர் சுந்தரியின் உடலை சீவலப்பேரி ரோடடில் உள்ள பாத்திமா கோயில் அருகே வீசிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக பாளை தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு பிறகு கொலையாளிகள் குறித்து துப்பு துலங்கியது.
திம்மராஜாபுரத்தை சேர்ந்த மருதவல்லி, வல்லிமுருகன் ஆகியோர் சுந்தரியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. மருதவல்லியை போலீசார் கைது செய்தனர். வள்ளிமுருகனை தேடி வருகின்றனர்.
வள்ளிமுருகன் சொந்தமாக ஆட்டோ, வேன் வைத்துள்ளார். கைதான மருதவல்லி, வள்ளிமுருகனிடம் வேன் டிரைவராக இருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications