ராஜாவை குற்றவாளி என்று சிஏஜி அறிக்கை கூறவில்லை-வீரப்ப மொய்லி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான நடைமுறைகளில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள சிஏஜி அறிக்கை, ராஜாவை குற்றவாளி என்று குறிப்பிட்டுக் கூறவில்லை என்று சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிஏஜி-யின் அறிக்கையை குற்றச்சாட்டாகக் கருத முடியாது. அது இறுதி தீர்ப்பும் அல்ல. சிஏஜி அறிக்கை காரணமாக எந்தவொரு அமைச்சரும் ராஜிநாமா செய்ததாக எனக்கு நினைவில்லை.
எனினும், அரசியலமைப்பில் சிஏஜியும் முக்கிய அங்கம். அதன் அறிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். குறிப்பிட்ட ஓர் அமைச்சகம் மீது சிஏஜி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அதன் பின்னர், நாடாளுமன்றத்தின் பொது கணக்கு கமிட்டி, சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்ட பத்திகளைத் தேர்வு செய்து விவாதம் நடத்தும். அதற்கு குறிப்பிட்ட துறை பதில் அளிக்க வேண்டும். இதுதான் நடைமுறை.
அலைக்கற்றை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்புவதை தவறாகக் கூற முடியாது. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு முழுஉரிமை உண்டு. பாஜக ஆட்சியில் பிரமோத் மகாஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது சிஏஜி இதேபோல் குற்றச்சாட்டை எழுப்பியது. அதற்காக அவர் ராஜிநாமா செய்யவில்லையே என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications