நிலத் தகராறு: உடன்குடி அருகே அதிமுக கிளை செயலாளருக்கு வெட்டு
உடன்குடி: உடன்குடி அருகே அதிமுக கிளை செயலாளர் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடன்குடி அருகேயுள்ள வேதகோட்டைவிளையைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் எண்ணெய் ஆலையில் வேலை பார்த்து வரும் இவர் அதிமுக கிளை செயலாளராக உள்ளார்.
அதிமுகவுக்கு சொந்தமான இடம் வேதகோட்டைவிளை கிராமத்தில் உள்ளது. அதில் பாதி கட்டிய நிலையி்ல் கட்சி கட்டிடம் உள்ளது. அதன் அருகே அதே ஊரைச் சேர்ந்த கிங்ஸ்லின் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் காலை கிங்ஸ்லின் மற்றும் அவரது சகோதரர்கள் தட்டி உள்ளிட்ட பொருட்களால் மறைப்பு ஏற்படுத்தி வீடு கட்டும் பணிகளைத் துவங்கினர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அதி்முக இடத்தை ஆக்கிரமிப்பதாக கூறித் தடுத்தனர். மேலும் மறைப்புகளை அப்புறப்படுத்துமாறும் கூறினர். நேற்று மாலைக்குள் அப்புறப்படுத்துவதாக கிங்ஸ்லின் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்த செல்வராஜிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் கிங்ஸ்லின் வீட்டுக்குச் சென்று இது பற்றி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் கிங்ஸ்லின் மற்றும் அவரது உறவினர்கள் செல்வராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயம் அடைந்த செல்வராஜை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் இரவு 10.30 மணி அளவில் உடன்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு டாக்டர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதையறிந்த உடன்குடி பேரூராட்சி தலைவர் சாகுல் ஹமீது, கவுன்சிலர் முகைதீன், சமூக சேவகர் கலீல் ரகுமான் மற்றும் அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு அங்கிருந்த நர்சுகள் செல்வராஜுக்கு முதல் உதவி அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக 108 மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குலசேகரப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications