ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜேபிசி விசாரணை கிடையாது-காங்.

மேலும், இந்தக் கோரிக்கை அர்த்தமற்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பின்னர் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். இதில் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுவதில்லை. இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிவதில்லை என்ற முடிவுஎடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை என்று எதிர்க்கட்சிகள் கேட்பது அர்த்தமற்றது.
சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்ற பொதுக் கணிக்குக்கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு எதிர்க்கட்சியினரும் உறுப்பினர்களாக உள்ளனர். அந்தக் கமிட்டிமுதலில் விசாரிக்கட்டும்.
இந்த நிலையில் ஜேபிசி விசாரணை தேவை என்ற கோரிக்கை முழுமையாக அர்த்தமற்றது. நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட பாஜக உதவ வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications