நாளை அழகிரி மகன் தயாநிதி திருமணம்-மதுரை வந்தார் கருணாநிதி
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், முதல்வர் கருணாநிதியின் பேரனுமான தயாநிதி அழகிரியின் திருமணம் நாளை நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி இன்று விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தார்.
இன்று பிற்பகல் மதுரை வந்த முதல்வருடன் மனைவி தயாளு அம்மாளும் உடன் வந்துள்ளார். விமான நிலையத்தில் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, அரசினர் விருந்தினர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று மாலை தமுக்கம் மைதானத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் முதல்வர் கலந்து கொள்கிறார்.
பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம் வருகை:
இதேபோல தயாநிதியின் திருமணத வரவேற்பில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நாளை நடைபெறும் திருமணத்திலும் இவர்கள் பங்கேற்கிறார்கள்.
வரவேற்பு மற்றும் திருமணத்தையொட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வருகையைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 4000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருமணம் மற்றும் வரவேற்பு நடைபெறும் தமுக்கம் மைதானத்திலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமணம் அல்லது வரவேற்பு ஏதாவது ஒன்றில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications