சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை: 200 டிவிக்கள் நாசம், ஒருவர் பலி
சுரண்டை: சுரண்டை பகுதியில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் டிரான்ஸ்பார்மர் மற்றும் 200 டிவிக்கள் சேதமடைந்தன. மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.
சுரண்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த 2 தினங்களாக வெயில் கொளுத்தியது. நேற்று காலையிலும் வெயில் அடித்த நிலையில் மாலை 3 மணி அளவில் திடீரென வானில் மேகக் கூட்டங்கள் திரண்டன. இதையடுத்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மின்னல் தாக்கியதில் சுரண்டையில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. மேலும் அப்பகுதியில் 200 டிவிக்கள் சேதமடைந்தன. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் சுரண்டை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
சுரண்டை வரகுணராமபுரத்தைச் சேர்ந்தசவர் பால்சாமி. விவசாயியான இவர் நேற்று மாலை வீட்டில் டிவி போடும்போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இது குறித்து சுரண்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சுரண்டை அண்ணாசிலை பகுதியைச் சேர்ந்தவர் முருகையா. இவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை முருகையா வீ்ட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் அவர் தூக்கி எறியப்பட்டார். அவரது வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. இதே போன்று அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது வீட்டுத் தோட்டத்தில் இருந்த 2 தென்னை மரங்கள் மின்னல் தாக்கி கருகின.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications