பிரேசில் அதிபருக்கு இந்திரா காந்தி அமைதி விருது
Subscribe to Oneindia Tamil

இந்திரா காந்தி அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் உலக அமைதி, முன்னேற்றம், உலக ஒற்றுமைக்காக பாடுபடுபவரைத் தேர்வு செய்து விருது வழங்குவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விருதுக்கு பிரேசில் அதிபர் லுலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மன்மேகன் சிங் தலைமையிலான குழு இவரைத் தேரந்தெடுத்துள்ளது. வளரும் நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தவும், வளர்ச்சியை அதிகரிக்கவும் பாடுபட்டதற்காக லுலாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது ரூ. 25 லட்சம் ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும் கொண்டது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சர்வதேச அணு சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் முஹம்மது அல்பராடய், பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications