பணவீக்க உயர்வைக் கட்டுப்படுத்த சீனா அதிரடி நடவடிக்கை!

இந்தியாவில் பணவீக்கம் சர்வ சாதாரணமாக இரட்டை இலக்கத்தையெல்லாம் தாண்டியுள்ளது. ஆனால் சீனா அந்த அளவு நிலைமை முற்றிப் போக விடுவதில்லை. குறித்த காலத்தில் குறித்த நடவடிக்கைகள் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி வருகிறது.
நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில்தான் சீனாவிலும் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. சீனாவின் இன்றைய பணவீக்க அளவு 4.4 சதவீதம். ஆனால் இது கடந்த 25 மாதங்களில் இல்லாத உயர்வு என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் 5 சதவீதத்தைத் தாண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த அளவைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது சீன அரசு.
முதல் கட்டமாக மின்சாரம், எரிவாயு, உரங்கள் போன்றவற்றின் விலையைக் குறைக்குமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது சீன அரசு. ரயில் கட்டணமும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மின்சாரம் கிடைக்க, அனைத்து நிறுவனங்களும் நிலக்கரி மற்றும் டீஸல் சப்ளையை தடையின்றி வழங்குவதாக அரசுக்கு உறுதியளித்துள்ளன. மேலும் அனைத்து சாலைகளிலும் லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த, குளிர் பருவ காய்கறிகள் மற்ரும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கள்ள மார்க்கெட்டில் பொருள்கள் விற்பதை அடியோடு தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications