கம்போடியாவில் விபரீதம்-விழா கூட்ட நெரிசலில் சிக்கி 345 பேர் பலி
நாம்பென்: கம்போடியாவில் நடந்த விழா ஒன்றில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 345 பேர்ப லியானார்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
தலைநகர் நாம் பென் நகரில்தான் இந்த விபத்து நடந்தது. நாட்டின் மிகப் பெரிய சோக நிகழ்வு இது என்று அந்த நாட்டு பிரதமர் இதை வர்ணித்துள்ளார்.
மழைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நாம் பென் நகருக்கு அருகே உள்ள தீவில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த அந்த இடத்தில் திடீரென நெரிசல் ஏற்படவே மக்கள் பீதியடைந்து அங்குள்ள பாலம் வழியாக வெளியேற முயன்றனர். அப்போது பெரும் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். மேலும், பாலத்திலிருந்து பலர் கீழே ஓடிக் கொண்டிருந்த ஆற்றிலும் விழுந்தனர்.
இதனால் அந்த இடமே மரணக் குழியாக மாறியது. மொத்தமாக கீழே விழுந்ததாலும், நெரிசலில் மிதிபட்டதாலும் பலர் உயிரிழந்தனர். பாலம் முழுவதும் உடல்கள் மயமாக காட்சி அளித்தது.
இந்த கோர சம்பவத்தில் 345 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இருப்பினும் உயிர்ப்பலி மேலும் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆற்றில் விழுந்தவர்களில் பலர் உயிரிழந்தனர். சிலர் மட்டும் நீந்திக் கரை சேர்ந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் ஹுன் சென் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், விபத்தில் 345 பேர் இறந்துள்ளனர். 320 பேர் காயமடைந்தனர். கடந்த 31 ஆண்டுகளில் கம்போடியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய சோக நிகழ்வு இதுதான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications