தொடரும் பேய் மழை-தத்தளிக்கும் மதுரை-பல பகுதிகளில் வெள்ளம்

மதுரை நகரி்ல் உள்ள வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடி வருகிறது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
மதுரை நகரில் கடந்த சில தினங்களாக வட கிழக்குப் பருவ மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில்தான் கன மழை பெய்து வருகிறது.
இந்த தொடர் பேய்மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளன.
எல்லீஸ் நகர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. வெள்ள நீர் சேகரமாகும் நீர்நிலைகள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், வெள்ள நீர் வடிய இடம் இல்லாமல் தேங்கியுள்ளது. அதனால் வெள்ள நீரை வெளியேற்ற வழி தெரியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.
மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் நிர்வாகம் இரவு முதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்மாய் உடைந்தது:
வடபழஞ்சி விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நடவு நாற்றங்கால்கள் நாசம் அடைந்துள்ளன.
வெள்ள நீர் அதிகரித்து, மதுரை தணக்கன்குளம் கண்மாய் உடைந்தது. உடைப்பெடுத்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் மக்களும் மாநகராட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் பத்து ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் இருந்த குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதேபோல உசிலம்பட்டி பகுதியிலும் கண்மாய் உடைந்து 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ள நீர் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ளதால், மதுரை நகரின் பெரும்பாலான சாலைகளும் மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் இதனால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் சாலைப் பள்ளங்களால் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.
வைகையில் வெள்ளம்-ரசிக்கக் குவிந்த மக்கள்:
மதுரையில், கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால்தான் வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுவதைப் பார்க்க முடியும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பேய் மழை காரணமாக வைகை ஆற்றில்வெள்ளம் இரு கரைகளையும் தொட்டபடி ஓடிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்க மக்கள் இரு கரைப் பகுதிகளிலும் கூடி நின்று ரசித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications