பஞ்சாயத்து ஊழியர் தற்கொலையில் திடீர் திருப்பம்: ஊராட்சி உதவியாளர்களுக்கு ஆதரவாக கலெக்டரிடம் மனு
நெல்லை: தற்கொலை செய்து கொண்ட ராஜகோபாலபேரி மக்கள் நல பணியாளர் அருமைராஜுக்கு எதிராக ஊராட்சி உதவியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலபேரி பஞ்சாயத்தில் மக்கள் நலப் பணியாளராக பணியாற்றிய அருமைராஜ் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தனது தற்கொலைக்கு பஞ்சாயத்து தலைவர் ஜான், உதவியாளர் நவநீதிகிருஷ்ணன் ஆகியோ்ர் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அருமைராஜ் தற்கொலைக்கு ஊராட்சி மன்ற உதவியாளர் காரணமல்ல எனக் கூறி நெல்லை மாவட்ட ஊராட்சி உதவியாளர் சங்கத் தலைவர் தயாளன் தலைமையிலான உதவியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு வராதவர்களின் பெயர்களை போலியாக அருமைராஜ் பதிவு செய்துள்ளார். இதை கடந்த 9-ம் தேதி ஊதியம் வழங்கும்போது ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உதவியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து அருமைராஜிடம் விசாரித்தபோது அவர் தனது தவறை ஒப்புக் கொண்டு இனிமேல் தவறு செய்யமாட்டேன் எனக் கடந்த 10-ம் தேதி ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார். இதன்பிறகு தான் அவர் தற்கொலை செய்துள்ளார்.
அவரது தற்கொலைக்கு ஊராட்சி உதவியாளர் காரணமாக இருக்க முடியாது. எனவே துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவுடன் தற்கொலை செய்த அருமைராஜ் எழுதிய ஒப்புதல் கடித்ததையும் அவர்கள் இணைத்திருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications