இப்போது வீடு கட்டுவதும், திருமணம் நடத்துவது எளிதாகிவிட்டது: ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சியில் வீடு கட்டுவதும், திருமணம் நடத்துவதும் எளிதான காரியமாகிவிட்டதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று ஸ்டாலின் பங்கேற்றார். முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஆவாரம்பாளையத்தில் 87 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து பேசிய அவர்,
ஒரு காலத்தில் வீடு கட்டுவதும், திருமணத்தை நடத்தி வைப்பதும் மிகவும் கடினமான காரியமாக இருந்தது. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் செயல்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களால் சுய மரியாதை திருமணங்களும், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடுகளை கட்டுவதும் எளிமையான செயலாகிவிட்டது.
தன்னை பெண் என்று அடையாளம் காட்டிக்கொண்டு முதல்வர் பொறுப்பில் உட்கார்ந்த ஜெயலலிதா, 1991ம் ஆண்டு முதல் வேளையாக என்ன செய்தார் தெரியுமா?.
ஏழைப் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வந்த திருமண உதவித் திட்டத்தை நிறுத்தினார். நியாயமாக ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும். திமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் தந்தால், நான் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லியிருந்தால் நாம் அனைவரும் ஜெயலலிதாவை பாராட்டியிருக்கலாம், வாழ்த்திருக்கலாம்.
ஆனால் அதன்பிறகு மீண்டும் 1996ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். அதனால் தான் மீண்டும் திருமண உதவித் திட்டம் வந்தது என்றார்.
கடத்தி கொலை-குழந்தைகள் பெற்றோருக்கு ஆறுதல்:
முன்னதாக கோவையில் கடத்திக் கொலை செய்யப்பட்ட சகோதர, சகோதரிகளான சிறுமி முஸ்கின், சிறுவன் ரித்திக் ஆகியோரின் பெற்றோருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார்.
அவர்களது வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின் குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குழுந்தைகளின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்தக் கொலையைச் செய்த மோகனகிருஷ்ணன் போலீஸ் எண்கெளண்டரி்ல் பலியானது நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications