மரபுசாரா மின்உற்பத்தியில் தமிழகம் முன்னோடி: பரூக் அப்துல்லா புகழாரம்
நெல்லை: மரபுசாரா மின்உற்பத்தியில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது என மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்திய அரசின் காற்று மின்சக்தி தொழில்நுட்ப மையத்தின் சார்பில் 2 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலை தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்திதுறை அமைச்சர் பரூக் அப்துல்லா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்தியாவில் மரபுசாரா மின்உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. மின்உற்பத்தி மூலம்தான் வேலைவாய்ப்பும் உருவாகிறது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கடல், காற்று, புவி வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும்.
காற்றும், நீரும் இலவசமாகக் கிடைப்பது. எனவே, மரபுசாரா மின்உற்பத்தி எளிமையானது. வருங்கால தலைமுறையினருக்கு தூய நீரையும், நல்ல சுற்றுச்சூழலையும் விட்டுச் செல்ல வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றுதான். நமது தேசிய கொடி எப்போதும் உயர பறக்க வேண்டும்.
காற்று, சூரிய வெப்ப மின்உற்பத்தியில் நல்ல வளர்ச்சி உள்ளது. விரைவில் 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு காற்று மின்சாரம் கிடைக்கும் என நம்புகிறேன். இந்தியாவில் லடாக், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 3 இடங்களில் புவி வெப்பம் மூலம் மின்சாரம் தயாரிக்க ஐஸ்லாந்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
ஹரியானாவில் கோதுமை அறுவடை செய்தபின் வைக்கோலில் இருந்து மின்சாரம் தயாரிப்பது போல் தமிழகத்திலும் வைக்கோலில் மின்சாரம் தயாரிக்கலாம் என்றார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications