தூத்துக்குடியில் தூதுவளை மி்ட்டாய் சாப்பிட்ட 2 குழந்தைகள் மயக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தூதுவளை மிட்டாய் சாப்பிட்ட 2 குழந்தைகள் மயங்கி விழுந்தனர்.
தூத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் ராமலெட்சுமி. இவர் கடந்த 18-ம் தேதி மயங்கிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்த ஜான்சன் மகள் ரினோசாவும் மயங்கிய நிலையில் மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டார்.
இரு குழந்தைகளும் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டதை அறிந்த டாக்டர்கள் அவர்களிடம் விசாரித்தனர். அதில் குழந்தைகள் சின்னகன்னிபுரத்தில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் தூதுவளை மி்ட்டாய் வாங்கி சாப்பிட்டதாகத் தெரிவித்தனர்.
கடந்த வாரம் ராமலெட்சுமியின் சகோதரியும் தூதுவளை மிட்டாய் வாங்கி சாப்பிட்டு மயங்கி விழுந்ததாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்றுச் சென்றார். மாணவிகள் யாருக்கும் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை.
இருப்பினும் விபரீதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கடைகளில் விற்கப்படும் தூதுவளை மிட்டாய் குறித்து விசாரிக்க வேண்டுமென்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளி மாணவ-மாணவிகள் தூதுவளை மிட்டாய் வாங்கி சாப்பிட்டு மயங்கி விழுவது அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications