தமிழகத்தில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு திட்டம்
சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு மருத்துவக் கல்லூரியை தொடங்கும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் ஏழைகளுக்கு தரமான மருந்துகளை இலவசமாக வழங்குவதற்காக மருத்துவ சேவைக் கழகம் மற்றும் மருந்து சேமிப்புக் கிட்டங்கியை தொடங்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து சுப்புராஜ் கூறுகையில், தமிழகத்தில் தற்போது 15 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில்தான். இதன் மூலம் அதிக அளவிலான மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை தமிழக அரசு அளித்து வருகிறது.
தற்போது மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டத்தை தமிழக அரசு தீட்டியுள்ளது. இது தமிழக மருத்துவ வரலாற்றில் மிகவும் முக்கியமான திட்டமாகும்.
தமிழகத்தில் உள்ள தனியார் டிரஸ்டுகள், பல் மருத்துவம், பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் போன்ற படிப்புகளை கிராமப்புறங்களில் தொடங்க தமிழக அரசு ஊக்கம் தருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் 6300 மருத்துவ அதிகாரிகள், 7242 ஸ்டாஃப் நர்ஸுகள், 1282 கிராம சுகாதார செவிலியர்கள், 9000க்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் சுப்புராஜ்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications