தூத்துக்குடியில் போலீஸ் டிரைவர் மீது நவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜார்ஜ் ரோடு காந்திநகரைச் சேர்ந்த உதயகுமார் மகன் திலோக் (20). இவர் கோவையில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரி விடுமுறைக்கு திலோக் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று மாலை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நண்பர்களுடன் அந்த வழியாகச் செல்லும் பெண்களை கேலி செய்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து ராஜீவ் நகரைச் சேர்ந்த அமுதா என்பவர் அங்கிருந்த ஆயுதப்படை போலீஸ் டிரைவர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திலோக் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீஸ் டிரைவர் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
இதனால் ஆத்திரமடைந்த திலோக்கின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் காந்திநகர் பகுதி மக்கள் திலோக்கை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஜார்ஜ் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications