தலித் பெயரைப் பயன்படுத்தி ஸ்பெக்ட்ரம் ஊழலை திசை திருப்ப முயற்சிக்கிறார் கருணாநிதி-வைகோ
சென்னை: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை தலித் பிரச்சினையாக்கி, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை திசை திருப்பப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உத்தமத் தலைவராக இருந்த காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோர் இருந்தபோதும், வாழ்ந்தபோதும் பொது வாழ்க்கையில் தூய்மையை கட்டிக்காத்து வந்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா சிக்கியதற்கு முழு காரணம் கருணாநிதிதான். ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கு என்ன என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.
நிரா ராடியா, கனிமொழி உரையாடல்களை பத்திரிகைகள் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதை கருணாநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலை திசை திருப்புவதற்காக ஆரியம், திராவிடம் என கருணாநிதி பேசுகிறார். இது மக்களிடம் எடுபடாது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு பிரச்சனையை தலித் பிரச்சனையாக திசை திருப்புகிறார். ஸ்டெக்ட்ரம் ஊழலால் தி.மு.க. வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. வை மொத்தமாக குறை சொல்லமாட்டேன். தி.மு.க. வுக்காக தங்கள் சொத்துக்களை விற்று கட்சியை வளர்த்த தொண்டர்கள் உள்ளனர்.
மதுரையில் நடந்த தனது பேரன் திருமண விழாவில் மணமக்களை, தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி போல வாழ வேண்டும் என கருணாநிதி வாழ்த்தினார். இப்படி பேசி 10 நாள் கூட ஆகவில்லை. அதற்குள் தற்போது காங்கிரஸ் கூட்டணி பற்றி ஏதோதோ பேசுகிறார்.
கருணாநிதிக்கு தன் குடும்பம், மக்களிடம் நிறைய பயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications