சென்னை சிறுவன் கீர்த்திவாசன் கடத்தல்-2 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷின் மகன் கீர்த்திவாசன் நவம்பர் 1ம் தேதி கடத்தப்பட்டான். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடத்தல்காரர்கள் ரூ. 3 கோடி கோடி கேட்டனர். பின்னர் ரூ. 1 கோடிக்கு சம்மதித்தனர். அதன்படி பணத்தைக் கொடுத்ததும் அவர்கள் சிறுவனை விடுவித்தனர்.
ஆனால் மறு நாளே போலீஸார் துரித கதியில் செயல்பட்டு சாதுரியமாக குற்றவாளிகள் இருவரையும் பிடித்தனர். இருவரும் ரமேஷின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு உறவினர்கள் என்பதும், அவர்களது பெயர்கள் விஜய், பிரபு என்றும் தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீஸார் பின்னர் குண்டர் சட்டத்தையும் பிரயோகித்தனர். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அம்பத்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிக்கை 330 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. 11 பிரிவுகளில் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 45 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இருவரும் பயன்படுத்திய கார் திருடப்பட்டது என்பதால் அதுகுறித்தும் தனியாக ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கையில், இரு குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை தர வேண்டும் என போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிக்கையை அம்பத்தூர் கோர்ட் ஏற்ற பின்னர் வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி போலீஸார் விண்ணப்பிக்கவுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications