13-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்-மீராகுமார் முயற்சி தோல்வி-பிரதீபாவிடம் எதிர்க்கட்சிள் மனு
டெல்லி: லோக்சபா சபாநாயகர் மீரா குமார் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார். கடந்த 12 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியிருப்பதற்கு ஒரு தீர்வு காணவே இக்கூட்டம். ஆனால் மீரா குமாரின் சமரச முயற்சி தோல்வியடைந்தது. ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து எதிர்க்கட்சியினர் மனு அளித்தனர்.
மீரா குமார் முயற்சி தோல்வி:
தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக சபாநாயகர் மீரா குமார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சியினர் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை உறுதியாக தெரிவித்தனர். குறிப்பாக இடதுசாரி தலைவர்கள் இதை அழுத்தமாக வலியுறுத்தினர்.
ஆனால் அரசுத் தரப்பில் அதற்கு உடன்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
பிரணாப் முயற்சி தோல்வி:
முன்னதாக நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, பாஜக தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் மற்றும் சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரியை சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றார்.
ஆனால் பிரணாபின் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
நாடாளுமன்றமும் தொடர்ந்து முடக்கம்:
முன்னதாக இன்று கூடிய நாடாளுமன்றத்தில் வழக்கம் போல அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் இன்றும் 13வது நாளாக ஒத்திவைக்கப்பட்டன.
ஸ்பெக்டரம் ஊழலுக்கு ஜேபிசி விசாணை நடத்த வேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் தீர்க்கமாக உள்ளதாலும், அரசுத் தரப்பு அதற்கு எதிராக உள்ளதாலும் நாடாளுமன்ற முடக்கம் தொடர் கதையாகியுள்ளது.
பிரதீபாவிடம் மனு:
இதற்கிடையே, இடதுசாரி தலைவர்கள், அதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ்வாடிக் கட்சி எம்.பிக்கள் 60 பேர் நாடாளுமன்றத்தில் இருந்து நடந்தே குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றனர். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்த அவர்கள் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அரசை ஜேபிசி விசாரணை நடத்த உத்தரவிடுமாறு அரசுக்கு ஆலோசனை அளிக்க கேட்டுக் கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications