ஆண்டிப்பட்டி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்-17 பேர் பலி: 90 பேர் படுகாயம்
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி அருகே நேற்றிரவு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 17 பேர் பலியாயினர். மேலும் 90 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து நேற்றிரவு மதுரை நோக்கி தனியார் பஸ் சென்றது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து போடி நோக்கி இன்னொரு தனியார் பஸ் சென்றது.
இந்த பஸ்கள் இரவு 8 மணியளவில் ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரம் விலக்கு என்ற இடத்தில் பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் திருமங்கலத்திலிருந்து வந்த பஸ், சின்னமனூர் பேருந்துக்கள் பாதி வரை புகுந்துவி்ட்டு, பின்னர் 100 அடி தூரம் வரை சென்று கவிழ்ந்தது.
இந்த பயங்கர விபத்தில் 14 பேர் அந்த இடத்திலேயே பலியாகிவிட்டனர். சம்பவம் அறிந்து தேனி, ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதில் 5 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், இரு சிறுவர், சிறுமிகள் அடங்குவர்.
காயமடைந்து மீட்கப்பட்ட 90 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications