2ஜி: பிரதமரை அவமதித்துள்ளார் ராசா- உச்ச நீதிமன்றம் கண்டனம்

இந்த வழக்கை நீதிபதி சிங்வி, நீதிபதி கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின்போது, ராசாவுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறுகையில், சட்ட அமைச்சகம் தெரிவித்த கருத்தை மனதில் கொண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், ராசாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தை ராசா நிராகரித்துள்ளார்.
பிரதமருக்கு ராசா எழுதிய பதில் கடிதத்தில், இந்த கோரிக்கை நியாயமற்றது, ஒருதலைப்பட்சமானது, தன்னிச்சையானது என கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்குக் கடிதம் எழுதும்போது இதுபோன்ற வார்த்தைகளையா அமைச்சர் பயன்படுத்துவது? இந்த விஷயத்தில் ராசாவின் போக்கு சரியல்ல. இந்தக் கடிதம் மூலம் பிரதமரையே அவர் அவமதித்துள்ளார்.
அதேபோல சட்ட அமைச்சகம் தெரிவித்த கருத்தையும் ராசா நிராகரித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அட்டார்னி ஜெனரலின் யோசனையை பெறும் வகையில் இந்த விவகாரத்தை மூத்த அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என்று சட்ட அமைச்சகம் ராசாவுக்கு யோசனை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.
ஆனால் அதையும் ராசா நிராகரித்துவிட்டதோடு சட்ட அமைச்சகத்தை குறை கூறி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சட்ட அமைச்சகத்தின் யோசனை சரியல்ல என்று கூறியுள்ளார்.
இவ்வாறு சட்ட அமைச்சகத்தையும் பிரதமரையும் உதாசீனப்படுத்துவது ஒரு அமைச்சருக்கு அழகா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகளின் இந்தக் கருத்தை ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தியார்ஜுனா மறுத்தார். பிரதமரை அவமதிக்க வேண்டும் என்பது ராசாவின் நோக்கமல்ல. மேலும் சட்ட அமைச்சகத்தின் யோசனையையோ அல்லது பிரதமரின் யோசனையையோ ராசா உதாசீனப்படுத்தவில்லை, நிராகரிக்கவும் இல்லை.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்ற அடிப்படையில்தான் ராசா செயல்பட்டுள்ளார் என்றார்.
ஆனால், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.
ராசா, சட்ட அமைச்சகம், பிரதமர் அலுவலகம் இடையே 2007ம் ஆண்டு நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடந்த கடித பரிமாற்றத்தை நீதிபதிகள் கருத்தில் கொண்டு இந்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications