பெங்களூரில் பிரான்ஸ் தூதரகம்.. அதிபர் சார்கோசி இன்று திறந்து வைத்தார்!!

அவரது இந்தப் பயணத்தின் போது, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்கு பின் சர்கோசியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இன்று பெங்களூருக்கு வந்த அவர், புதிய பிரெஞ்ச் தூதரகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் இஸ்ரோ சென்றார். அங்கு இந்தோ - பிரெஞ்ச் கூட்டு சேட்டிலைட் திட்டத்தைத் துவங்கி வைத்தார். பருவநிலை மாறுதல், கடல் ஆராய்ச்சி போன்றவற்றுக்காக இந்த செயற்கைக் கோள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நிக்கோலஸ் சர்கோசி இன்று மாலையில் ஆக்ரா சென்று மனைவி புரூனாவுடன் தாஜ்மகாலின் அழகை ரசிக்கிறார். அவருடன் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹெர்வி மோரின் மற்றும் பல உயர் அதிகாரிகள் இந்தியா வருகின்றனர்.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, வரும் ஜி 20 மாநாடு குறித்துப் பேசுகிறார்.
சர்வதேச நிதி அமைப்புகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் விலையை நிலைப்படுத்துதல் குறித்தும் அவர் பிரதமருடன் விவாதிக்கிறார்.
10000 மெகா வாட் இந்திய - பிரான்ஸ் அணு உலைத் திட்டத்தில் உடன்பாட்டில் திங்களன்று கையெழுத்திடுகிறார் சர்கோசி.
சர்கோசியின் வருகையையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications